கோவை மருதமலை கோயிலில் விதிகளை மீறிப் பக்தர்கள் சிலரை மலைபாதையில் அனுப்பிய ஊழியர்களிடம், பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பும் காட்சி வைரலாகி வருகிறது.
கோவை மருதமலை முருகன் கோயிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மலைப்பாதையில் காரில் சென்று சுவாமி தரிசனம் செய்யக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் பக்தர்கள் கோயில் பேருந்திலேயே மலைபாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது. கோயில் பேருந்தில் அதிகப்படியான பக்தர்கள் ஏற்றப்பட்டுவதால் பேருந்தில் நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஏராளமான பக்தர்கள் காரிலேயே மலைப்பாதையில் பயணிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பேருந்திற்காக வரிசையில் நின்ற பக்தர் ஒருவர், எந்த அடிப்படையில் காரில் பக்தர்கள் சிலரை அனுப்புகிறீர்கள் எனக் கோயில் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.