உக்ரைனின் பிப் இவானில் கார்பாத்தியன் மலைபகுதிகளில் நிலவும் கடும் பனிப் பொழிவால் திரும்பும் திசையெல்லாம் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
கார்பாத்தியன் மலைகள் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு பெரிய மலைத்தொடர் ஆகும்.
இது உக்ரைன், போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா, செக் குடியரசு மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இருப்பினும் உக்ரைனில் கார்பாத்தியன் மலைகள், செழிப்பான வனப்பகுதி, அழகிய நிலப்பரப்புகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளைக் கொண்டவையாக விளங்குகின்றன.
தற்போது அந்தப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் திரும்பும் திசையெல்லாம் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால் அங்குச் சுற்றுலா மற்றும் மலையேற்றம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.