ஆப்கானிஸ்தானின் நிலத்தை மற்றொரு நாடு பயன்படுத்த அனுமதிக்க விடமாட்டோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பு, 2021ல் ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில் பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ள மாஸ்கோ பார்மட் கன்சல்டேசன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான் எனும் அமைப்பின் ஆலோசனை கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.
அப்போது பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் மூன்றாம் தரப்பு ராணுவ உள்கட்டமைப்பை நிலைநிறுத்துவதை ரஷ்யா உறுதியாக நிராகரிக்கிறது எனக் கூறினார்.
முன்னதாக ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமான தளத்தை அமெரிக்காவிடம் தர வேண்டும் என டிரம்ப் கூறியிருந்த நிலையிலேயே, செர்ஜி லாவ்ரோவ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.