ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல்முறையாக ஒரு பெண் பிரதமரை ஜப்பான் தேர்ந்தெடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.
சிறந்த ஞானமும், மன வலிமையும் கொண்ட சனே தகாய்ச்சி அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ள டிரம்ப், இது உன்னதமான ஜப்பான் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.