ராணிப்பேட்டையில் பள்ளி செயல்பட்டு கொண்டிருந்தபோது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் துரைமுருகன் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.
கொண்ட குப்பம் ஊராட்சி குமணந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், அரசுப் பள்ளி செயல்படும்போது நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நிகழ்ச்சிகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ஒரு நாளில் மாணவர்களின் கல்வி ஒன்றும் பாதிக்கப்படாது என அமைச்சர் துரைமுருகன் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.