நோபல் பரிசு அறிவிக்கப்படுமா என்பது தனக்கு தெரியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். மத்திய கிழக்கிற்கான அமைதி என்பது அழகான வாக்கியம் என்று குறிப்பிட்ட அவர், ஹமாஸ் மற்றும் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது ஒரு செய்தியாளர் உங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிரம்ப், அது தனக்கு தெரியாது என்று தெரிவித்தார். ஏழு போர்களை தீர்த்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், எட்டாவது போரையும் தீர்த்து வைத்துவிடுவோம் என நம்புவதாகக் கூறினார்.
ரஷ்யாவில் நிலவும் சூழ்நிலை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த டிரம்ப், வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீரத்து வைத்ததில்லை என்றும், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு கொடுக்காமல் இருக்க ஒரு காரணத்தை அவர்கள் கண்டறியலாம் என்றும் தெரிவித்தார்.