மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் எனத் தன்னை விமர்சித்த அதிபர் டிரம்புக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் என்றும், பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பதாகவும் கூறிய டிரம்ப், நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் கடந்தகால செயல்பாடுகளை பார்த்தால் அவருக்கும் இதே பிரச்னை இருப்பதாகத் தெரிவதாகவும் கிரெட்டா பதிலடி கொடுத்துள்ளார்.