இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியா தலைநகர் கான்பரா விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை, அந்நாட்டு பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பீட்டர் கலீல் வரவேற்றார்.
பின்னர் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாரம்பரிய முறைப்படி பழங்குடியின மக்கள் வரவேற்றனர்.
பிறகு நாடாளுமன்றத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர்.