வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பண்டபல்லியில் ஏழைகளுக்கான தொகுப்பு வீடுகள், திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அங்கு அங்கன்வாடி மைய புதிய கட்டட திறப்பு விழாவுக்கு வந்த திமுக ஒன்றியக் குழு பெருந்தலைவர் சத்யானந்தம என்பவரை முற்றுகையிட்ட கிராம மக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.
100 நாள் வேலை, தொகுப்பு வீடு, அடிப்படை வசதிகள் கேட்டு 4 ஆண்டுகளாகியும் செய்து தராதது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.