தனது முன்னாள் மனைவி தனஸ்ரீ, தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்குக் கிரிக்கெட் வீரர் சாஹல் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்குக் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் விவாகரத்து கொடுத்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, திருமணம் ஆன 2 மாதத்திலேயே சாஹல் தன்னை ஏமாற்றுவதை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்துள்ள கிரிக்கெட் வீரர் சாஹல், தான் ஏமாற்றியதை 2வது மாதத்திலேயே கண்டுபிடித்திருந்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டதால், அதனைக் கடந்து முன்னேறிச் செல்கிறேன் எனவும் சாஹல் கூறியுள்ளார்.