கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும் எனவும், அதே நேரம் அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் அளித்த பேட்டியில்,
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்தால் வரவேற்பு இருக்கும் என்றும் அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கும்போது அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.