காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியான 6 நாட்களில் வசூலித்த தொகைகுறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 அக்டோபர் 2-ம் தேதி இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியானது.
காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் வெளியான 6 நாள்களில் இதுவரை 427 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காந்தாரா திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலை காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெறும் 6 நாள்களில் கடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.