மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை அம்மாநில அமைச்சர் நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த அபாயகரமான மருந்து, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில், இது முற்றிலும் தமிழக அரசின் அலட்சியத்தை காட்டுவதாக மத்திய பிரதேசத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு மருந்திற்கு உரிமம் வழங்குவதும், அதன் தரத்தை ஆய்வு செய்வதும் அந்த மாநிலத்தின் கடமை எனக்கூறிய அவர், தமிழக அரசின் அலட்சியத்தால்தான் குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மேலும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக நரேந்திர சிவாஜி படேல் தெரிவித்துள்ளார்.