ராணிப்பேட்டை மாவட்டம் கல்புதூரில் தங்களுடைய கிராமத்திற்கு சொந்தமான இடத்தை வெளியூரைச் சேர்ந்த மக்களுக்குப் பட்டாவாக வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்புதூர் கிராம பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு பொது இடத்தில் வேறு பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.