நடிகை நயன்தாரா தனது திரைப் பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
2003-ல் மனசினகாரே என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான நயன்தாரா, 2005-ல் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
சந்திரமுகி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை நயன்தாரா.
லேடி சூப்பர் ஸ்டாராகச் சிகரம் தொட்ட நயன்தாரா, திரைப் பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முதன் முதலில் கேமரா முன்பு நின்று 22 வருடங்கள் ஆகின்றன; ஆனால் சினிமா தனது வாழ்க்கையில் காதலாக மாறும் என்று அப்போது தெரியவில்லை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு காட்சியும் தன்னை செதுக்கியதாகவும், அதற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
















