மதுரை அம்மச்சியாபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் தனியார் வாகனங்கள்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
அம்மச்சியாபுரத்தில் அசுத்தம் செய்யப்பட்ட தண்ணீரின் மாதிரியைத் தடயவியல் அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தனியார் வாகனங்கள் மூலம் தண்ணீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மூன்று வாகனங்கள் மூலம் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், அசுத்தம் செய்யப்பட்ட குடிநீர் தொட்டியை முழுவதுமாகச் சுத்தம் செய்யக் குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுவரை, பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்றும், மக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.