தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்பொருட்களைஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனபட்டி கிராமம் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. கரும்பு, வாழை , பருத்தி, தக்காளி, வெண்டைக்காய் என பல்வேறு வகையிலான விவசாயங்களே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறது.
அத்தகைய விவசாய பூமியான ரோசனப்பட்டியிலிருந்து பிராதிக்காரன்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் கி பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த மற்றும் முழுமையான உருவம் கொண்ட புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் அரசனின் தோற்றமும், சுருள் போன்ற முடியும், தெளிவான காது மடல்களின் மூலமாகவும் புத்தரின் உருவம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நிலப்பகுதிகளில் கீழடிக்கு நிகரான கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, டெரகோட்டாஸ் என அழைக்கப்படும் சுடுமண் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
அதோடு விளையாட்டுப் பொம்மைகள், வட்ட கற்கள், கற்கால கோடாரிகள் மற்றும் சுத்தியல் போன்ற கருவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதை பார்க்கும்போது பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்று இருப்பதாகக் கூறப்படுகிறது பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் முருகன், விநாயகர் சிலைகளும், சிவன் வழிபாட்டு தளத்திற்கான சமணப்பள்ளி இருந்த சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விவசாயி ஒருவர் மன்னனுக்கு தானமாக எழுதிக் கொடுத்த கல்வெட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ரோசனப்பட்டி கிராமத்தின் விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்லியல் பொருட்களை ஆய்வுக்குட்படுத்துவதோடு, விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















