ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும்; தயாரிப்பாளர்கள் SAFE என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஜெயவேல் என்பவர் இயக்கத்தில் இளம் பாடகர் பூவையார் ஹீரோவாக நடித்துள்ள ராம் அப்துல்லா ஆண்டனி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், மக்கள் சினிமாதான் வாழ்க்கை என்று நினைப்பதால், வெட்டு, குத்து, கொலை என இல்லாமல் இளைஞர்களுக்கு வழிகாட்டும் படங்களை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, மத நல்லிணக்கம் உள்ள இடம் சினிமாதான் எனக் கூறினார். பின்னர் பேசிய நடிகர் ஜாவா சுந்தரேசன் , நல்லவர்கள் அரசியலுக்கு செல்கிறார்கள் எனவும், நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார்.
















