தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடைய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த குர்ஜிந்தர் சிங் மற்றும் திவான் சிங் ஆகியோரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ எடையுள்ள வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
















