திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வீட்டுமனை பட்டா கேட்ட மக்களிடம், எம்.எல்.ஏ ஆவேசமாகப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்லப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டார்.
அப்போது, வெலக்கல்நத்தம் ஊராட்சியை சேர்ந்த மக்கள், எம்எல்ஏவை முற்றுகையிட்டு வீட்டுமனை பட்டா கேட்டுக் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, கோபமடைந்த எம்எல்ஏ தேவராஜ், சாலை மறியல் செய்தால் பட்டா வழங்கிவிட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்தபோது தாங்கள் இந்த கோரிக்கையைத் தான் வைத்ததாகப் பெண் ஒருவர் கூறினார்.
அதற்குத் தேர்தல் நேரத்தில் ஆயிரம் சொல்வோம் என எம்.எல்.ஏ. தேவராஜ் அலட்சியமாகப் பதிலளித்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.