இந்திய விமானப் படை விழாவின் விருந்தில் வழங்கப்பட்ட உணவுகளுக்குப் பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை வைத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய விமானப் படையின் 93ஆம் ஆண்டு விழா காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் புதன் கிழமை நடைபெற்றது.
விழாவின்போது நடைபெற்ற இரவு விருந்தின் உணவு பட்டியலைப் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா பகிர்ந்துள்ளார்.
அதில், பாகிஸ்தானை கிண்டலடிக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானில் இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்திய இடங்களின் பெயர்களால் உணவுகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, ரஃபிகி ராரா மட்டன், போலாரி பனீர் மேத்தி மலாய், சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தால் மக்கானி, ஜகோபாபாத் மேவாப் புலாவ், பகவல்பூர் நான், பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மெனுவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.