இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேசினேன் என்றும், டிரம்ப் தலைமையில், ஏற்பட்டுள்ள காசா அமைதி ஒப்பந்தத்துக்காக நெதன்யாகுவை பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசா மக்களுக்கு மனித நேய உதவிகளை செய்வதையும் இந்தியா வரவேற்பதாகவும், உலகில் பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.