இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ருத்ரா படைப்பிரிவு வடக்கு சிக்கிமில் தீவிர பயிற்சி மேற்கொண்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் உலக நாடுகளுக்கு வலிமையான செய்தியை அனுப்பியது இந்தியா.
தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் வலிமையான போர் தயார்நிலையை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்துள்ளது.
அந்த வகையில் எல்லைகளில் விரைவான தாக்குதல் நடவடிக்கைகளுக்காக ருத்ரா படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்து.
இந்தப் படைப் பிரிவின் கீழ் ராணுவ வீரா்கள், ஆயுதங்கள், பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள், சிறப்புப் படைகளைச் சோ்ந்த வீரா்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ருத்ரா படைப்பிரிவு வடக்கு சிக்கிமின் உயரமான நிலப்பரப்பில் பயிற்சி மேற்கொண்டு தயார்நிலையை நிரூபித்துள்ளது. இது இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.