அல்பேனியாவில் வழக்கு விசாரணையின்போதே நீதிமன்றத்தில் நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேனியா நாட்டின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா என்பவர் வழக்குகளை விசாரித்து வந்தார்.
அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார்.
ஆனால், தீர்ப்பு வழங்கிய உடனேயே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சரமாரியாகச் சுட்டார்.
இதில் நீதிபதி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.