ராணிப்பேட்டை மாவட்டம் பென்னகர் – ராந்தம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் மாணவர்களும், கிராம மக்களும் அவதியடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பென்னகர் – ராந்தம் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
இதனால், ராந்தம், பாரியமங்கல், குட்டியம், மழையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலவை மற்றும் ஆற்காடு பகுதிக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
அதேபோல் பென்னகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ராந்தம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர், 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.