2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச நிலவரப்படி தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 61.60 அமெரிக்க டாலராக உள்ளது. இது அடுத்தாண்டு 52 டாலர் என்ற அளவிற்கு கணிசமாகக் குறையும் என அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், 56 டாலராகவும், ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனம் 58 டாலராகவும் இருக்கும் எனக் கணித்துள்ளன. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 80 காசுகளுக்கும் டீசல், 92 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும். இதனால் வாடிக்கையாளர்கள் நிவாரணம் கிடைக்கும்.
அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் எனவும் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரிக்கும் எனவும் பணவீக்கம் குறைந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.