ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் பழங்களை ஏற்றிச் சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிராவில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரியை நோக்கி மினி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது.
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையின் ஒன்றாவது கொண்டை ஊசி வளையில் வந்தபோது சரக்கு வேன் கவிழ்ந்தது.
இதனால் பழப்பெட்டிகள் சாலை விழுந்தன. இதையடுத்து கிரேன் மூலம் வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று வாகனம்மூலம் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.