தேனி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அபிபட்டி கிராம வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றுபவர் பாலமுருகன். இவர் தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கோயில் திருவிழாவிற்காக ஆப்பக்கரை கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் மற்றும் அலுவலர்களை அழைத்துள்ளார்.
அதன்பேரில் திருவிழாவுக்கு அனைவரும் வந்த நிலையில், ஊத்தம்பாறை ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் அடித்துச் செல்லப்பட்டார்.
மற்ற நபர்கள் தப்பித்த நிலையில், பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு உயிரிழந்தவரின் உடலைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.