தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் - கோட்டை விட்ட தமிழக அரசு!
Oct 10, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

Web Desk by Web Desk
Oct 10, 2025, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேச மாநிலத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்த தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயங்கி மருந்து நிறுவனம் குறித்தும், சுகாதாரத்துறையின் அலட்சியத்தையும் இந்தச் செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

துருப்பிடித்த இயந்திரங்களும், அசுத்தமிக்க தண்ணீர் நிறைந்த பீப்பாய்களும் நிறைந்த இந்த இடம் தான் 20க்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் மருந்தைத் தயாரித்த இடம்.

செப்டம்பர் 7 ஆம் தேதி மத்திய பிரதேசம் மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கும் அளவிற்கான சம்பவம் அரங்கேறத் தொடங்கியது. அடுத்தடுத்து குழந்தைகள் உடல்நலக்குறைவால் உயிரிழக்கத் தொடங்கினர். 6 குழந்தைகள் உயிரிழப்புக்கு பின் நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர்கள் அருந்திய கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது.

அந்த மருந்தை மாநிலம் முழுவதும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டாலும் குழந்தைகளின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதுவரை 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் நிலையில் அந்த இருமல் மருந்து தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியானது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல்ஸ் எனும் நிறுவனத்தில் தான் 20க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

காற்று வடிகட்டிகள் மற்றும் கற்றோற்ற அமைப்புகள் வேலை செய்யாத நிலையில் இயந்திரங்களும் துருப்பிடித்த நிலையில் காட்சியளிக்கின்றன. மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்திருக்கும் அறிக்கையின் படி இந்த நிறுவனத்தில் தர உத்தரவாதப் பிரிவு எதுவும் இல்லை என்பதோடு, மருந்துப் பரிசோதனை, தொகுதி வெளியீடு அல்லது திரும்பப் பெறுதல் போன்ற எந்த நடைமுறையும் வகுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

சட்டப்படி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு உரிமம் வழங்கும் போது சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கே பொறுப்பு இருப்பதாக மத்திய பிரதேசஅரசுக் குற்றம் சாட்டியுள்ளது.குறிப்பாகத் தமிழகத்தில் அமைந்திருக்கும் நிறுவனத்தில் ஆய்வை நடத்தும் பொறுப்பு, தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கும் சான்றிதழ் வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கே இருப்பதாகவும் மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

20 குழந்தைகள்உயிரிழப்புக்குக் காரணமானன மருந்து நிறுவனத்தை மூட முடியாது என இரு தினங்களுக்குமுன்பாகப் பேட்டியளித்தத மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விவகாரம் பெரிதான பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும்எனத் தற்போது மழுப்பலான பதிலை அளிக்கிறார்.

தமிழகத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் தவறை கண்காணிக்கவோ, தடுத்த நிறுத்தவோ தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியமே 20 குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லாத மத்திய பிரதேச மாநில அரசு, தங்களது காவலர்களை அனுப்பி மருந்து நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளது.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  பொதுவாகவே தமிழக சுகாதாரத்துறையின் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை இதுபோன்ற தனியார் நிறுவன மருந்து உற்பத்தி கிடங்குகளை குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அந்த ஆய்வை செய்ய வேண்டிய அதிகாரிகளின் பணியிடங்களே காலியாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என அவலநிலையில் காட்சியளிக்கும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தவோ, தரச்சான்றிதழ் வழங்கவோ தவறிய தமிழக சுகாதாரத்துறையின் மீது கடும் அதிருப்தி எழுந்து வரும் நிலையில், தமிழக அரசின் அலட்சியமிக்க பதில்களும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

22 பிஞ்சு உயிர்கள் பறிபோன பின்பும் தனது அலட்சியத்தை நியாயமாக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் இயங்கும் மருந்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: tn govt22 children die from substandard cough medicine: Pharmaceutical company violates rules - Tamil Nadu government leaves the fortதரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்புகோட்டை விட்ட தமிழக அரசு
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

Next Post

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Related News

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies