ஊத்தங்கரை அருகே தகவல் கொடுத்து அரைமணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், விபத்தில் சிக்கிய மாணவிகள் வேதனையில் தத்தளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிச் சென்ற டிராவல்ஸ் வாகனம், நெல் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 18 மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆனால் 108-க்கு தகவல் கொடுத்தும் ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதனால் அங்கிருந்த நபர்கள் சிலர், தங்களது இருசக்கர வாகனத்தில் சில மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பிறகு வந்த ஆம்புலன்ஸ், மீதமுள்ள மாணவிகளை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
இந்நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட நான்கு மாணவிகளுக்குக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.