2026-27 கல்வியாண்டில், பள்ளி பாடத்திட்டத்தில் Artificial Intelligence-ஐ அறிமுகப்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி மூன்றாம் வகுப்பு முதல், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளிலும் AI ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
சிபிஎஸ்இ அனைத்து தர நிலைகளிலும் AI ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி வருவதாகவும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தங்களை பொருத்திக் கொள்ளும் அளவுக்கு நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
பாடத் திட்டங்களை தயாரிக்க ஆசிரியர்கள் ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்றும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் தயார்படுத்துவதே தங்களது நோக்கம் என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.