திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் புரட்டாசி கிருத்திகையையொட்டி நடைபெற்ற தங்கத்தேர் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், புரட்டாசி கிருத்திகையையொட்டி, ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார். தங்கத்தேரை வடம் பிடிக்க, 15க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில், அவர்கள் தேரை இழுத்துச் சென்றனர். பிரகாரத்தை தேர் சுற்றிவர திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகனை வழிபாடு செய்தனர்.