அமெரிக்காவில் ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், 19 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில் உள்ள Hickman County ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலை முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வெடி விபத்து நிகழ்ந்தபோது பணியில் இருந்த 19 பேரை காணவில்லை என்றும், பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் Tennessee மாகாண ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.