கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறந்துவிடும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை வரை காவிரியில் வெறும் எட்டாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு 9 மணியளவில் 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 68 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக காவிரியில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.