நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது - நயினார் நாகேந்திரன்
Oct 11, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Oct 11, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய நபர்களான திருவேங்கடம் மற்றும்  நாகேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து மரணித்துள்ள நிலையில்,  ஆர்ம்ஸ்ட்ராங்  கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றவே கூடாது என மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மல்லுக் கட்டியது திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

ஆனால், மாண்பமை உச்சநீதிமன்றமோ சிபிஐ விசாரணைக்கு பச்சைக் கொடி காண்பித்து ஆளும் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்துவிட்டது – சபாஷ்! மேலும், எம்பெருமான் முருகனின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் மலையின் நிறத்தை மாற்றுவதற்கு முரண்டு பிடித்தவர்களைக் கண்டிக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்தது இந்த மதம் பிடித்த திமுக அரசு. ஆனால், மாண்பமை மதுரை உயர்நீதிமன்றமோ “திருப்பரங்குன்ற மலை என்ற இயற்பெயரே இனி தொடரும், அங்கே ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிடக் கூடாது” என்றொரு தீர்ப்பை வழங்கி, குன்றம் முழுதும் குமரனுக்கே சொந்தம், என்பதை உறுதிப்படுத்திவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிளவுவாத அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் திமுகவிற்கு இந்நேரம் இரத்த அழுத்தம் எகிறியிருக்கும் – சபாஷ்! அடுத்ததாக, நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த சிறுநீரகத் திருட்டுகள் குறித்து இதுவரை ஒரு FIR -ஐ கூடப் பதிவு செய்யாத ஆளும் அரசின் அலட்சியத்திற்கு குட்டு வைக்கும் வகையில், இவ்விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்.

ஆனால், திமுக அரசோ எங்கள் ஆட்சியில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க நாங்களே தான் அதிகாரிகளை நியமிப்போம் என மண்டையைத் தேய்த்துக் கொண்டே மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு சென்று அடம் பிடித்தது. ஆனால், மாண்பமை உச்சநீதிமன்றமோ “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம்” எனக் கூறி ஆளும் அரசுக்கு பெரிய குட்டு வைத்து அனுப்பிவிட்டது – சபாஷ்!

இறுதியாக, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வரம்பிற்கு கீழ் வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஏன் அதை விசாரித்தது?” என்ற கிடுக்கிப்பிடி கேள்வியால் தமிழக அரசை சுற்றி வளைத்துள்ளது மாண்பமை உச்சநீதிமன்றம். கரூரில் நிகழ்ந்த துர்மரணங்களின் கறைகளைத் தங்கள் கரங்களிலிருந்து கழுவி விடுவதற்காக எதிர்தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசோ இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்கிறது – சபாஷ்! என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து சட்டத்தின் சவுக்கடிகளால் சல்லி சல்லியாக நொறுங்கிப் போய் கிடக்கும் கழகக் கண்மணிகளே இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளுங்கள்! “மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமெதற்கு?” “சிபிஐ விசாரணையைக் கண்டு இத்தனை பதற்றமெதற்கு?” “தொட்டதெற்கெல்லாம் நீதிமன்றங்களை நாடி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்?” போன்ற மக்களின் பல கேள்விக் கணைகள் இனி உங்களை விடாது துளைக்கப்போகின்றன என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: bjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechsupere court orderArmstrong. murder caseNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா!

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

சீனா மீது கூடுதலாக 100% வரி – அதிபர் டிரம்ப் அதிரடி!

நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேர் கைது – 250 கிராம் தங்கம் பறிமுதல்!

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies