கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விஜயபுரா முத்தேபிஹால் நகரில், 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சச்சின் கவுசிக் வசித்து வருகிறார்.
கடந்த 24ம் தேதி நீதிபதி வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்துக் குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 250 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் 2 கார், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.