நடிகர் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல் பரவி வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் வீடியோவை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலானதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் வெளியூர்களில் சுற்றி திரிந்த புகைப்படங்கள் வைரலாகின. இதனிடையே தேவர்கொண்டா – ராஷ்மிகாவுக்கு கடந்த வாரம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், தான் நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் வீடியோவை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.
அதில், தான் அணிந்திருக்கும் வைர நிச்சயதார்த்த மோதிரத்துடன் ராஷ்மிகா நாய்க்குட்டியை கொஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை கண்ட அவரது ரசிகர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய்தேவர்கொண்டாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.