தேனி மாவட்டம் கம்பத்தில் கேரள கூலி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சூரை சேர்ந்த முகமது ராபி என்பவர் கம்பத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் முகமது ராபியும் சக ஊழியர் உதயகுமாரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உதயகுமார், முகமது ராபியை சுத்தியால் மார்பில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து உதயகுமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர்.