நோபல் பரிசுக்குத் தேர்வான மரியா கொரினா மச்சாடோவிடம், தனக்கு நோபல் பரிசை வழங்கும்படி தான் கேட்கவில்லை என அதிபர் டிரம்ப் கிண்டலடித்துள்ளார்.
2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்வாகியுள்ளார்.
முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் உட்பட 8 போர்களை நிறுத்தியதாகக் கூறி வந்த அதிபர் டிரம்ப், அதற்காகத் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்து வந்தார்.
ஆனால் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாத நிலையில், தன்னுடன் தொலைபேசியில் பேசிய மரியா தனது சார்பில் நோபல் பரிசை பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததாகக் கூறினார். அவரிடம் நோபல் பரிசை தனக்கு வழங்கும்படி கேட்கவில்லை என்றும் கிண்டலாகத் தெரிவித்தாக டிரம்ப் கூறியுள்ளார்.