திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பராசக்தி அம்மனின் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இதில், ஏழாம் நாள் விழாவில் விநாயகர், முருகர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மர தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
இதன் காரணமாகத் தற்போது 48 அடி உயரத்தில் 180 டன் எடை கொண்ட பராசக்தி அம்மன் தேரின் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.