நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் போதையில் இருந்த இளைஞர் அரசுப் பேருந்து ஒட்டுநரை காலணியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிளிப்பாகுட்டை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் ராசிபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் ஓட்டிச் சென்ற பேருந்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது, போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தைச் சாலையின் குறுக்கே நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கேட்ட ஓட்டுநரை போதையில் இருந்த இளைஞர் தகாத வார்த்தைகளால் பேசிக் காலணியால் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.