உத்தரபிரதேசத்தில் தனது கணவனுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த பெண்ணை சாலையில் வைத்து மனைவி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
கான்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான நபருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் நர்வால் மோட் பகுதியில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபரின் மனைவி, இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துத் தாக்குதல் நடத்தினார்.
அப்போது இரு பெண்களும் தலை முடியைப் பிடித்தபடி சாலையிலேயே சண்டையிட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.