தூத்துக்குடி அருகே புகார் மனுவை பெறவில்லை எனக் கூறி காவல்நிலையம் முன்பு தீக்குளித்த பிரியாணி கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முள்ளக்காடு காந்தி நகரை சேர்ந்த சுவிசேஷராஜ் என்பவர் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவர் குடும்ப பிரச்னை காரணமாக முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 9ம் தேதி புகார் மனு அளிக்க வந்துள்ளார்.
சுவிசேஷராஜ் மதுபோதையில் இருந்ததால் காலை வந்து மனு அளிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.
இந்தநிலையில் அவர் காவல்நிலையம் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக வெளியே வந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சுவிசேஷராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.