டெல்லியில் பிரதமர் மோடியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்காகக் கேரளாவுக்கு நிவாரணமாக 260 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த நிதி இதுவரை கேரளாவுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது வயநாடு நிலச்சரிவுக்கான நிவாரண நிதியை முழுமையாக உடனடியாக விடுவிக்க வேண்டும் எனப் பிரதமரிடம் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார்.