திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தைக் கிராம மக்கள் புறக்கணித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அந்தவகையில், அத்திப்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை அப்பகுதி மக்கள் புறத்தணித்தனர்.
தொடர்ந்து, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இடித்து அகற்றப்பட்ட ஐந்து அரசுக் கட்டடங்களை மீண்டும் கட்ட, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருவதாகவும், விரைந்து புதிய கட்டடங்களை கட்டினால் மட்டுமே கிராம சபை கூட்டத்தில் இனி பங்கேற்போம் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.