நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சிறை’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக அனந்தா நடித்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.