விசிகவினர் வழக்கறிஞரைத் தாக்கிய விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தான் காரணம் எனத் திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பாஜக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் ஜனவரி மாதத்திற்கு பின்னரே கூட்டணி முடிவுக்கு வரும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
கூட்டணி வலுவாக உள்ளதாகவும், மீண்டும் ஆட்சி பிடிப்போம் எனவும் வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஒருவரின் தனிப்பட்ட சொந்த கருத்திற்கு பதில் சொல்ல முடியாது என நயினார் நாகேந்திரன் கூறினார்.
விசிகவினர் வழக்கறிஞரை தாக்கிய விவகாரத்தில் திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொந்த பிரச்சினைகளுக்காகப் பிற கட்சிகளை பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.