தமிழகம் தலைநிமிர தமிழனின் நடைபயணம் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணம் இன்று தொடங்குகிறது…
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பிரச்சார பயணத்தை இன்று தொடங்குகிறார்.
மதுரையில் மாலை 6 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் பங்கேற்க உள்ளனர். நடைபயணம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.