பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகள் என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றவுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பீகார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால், பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் செளத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இன்று முக்கிய முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.