காபூலில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரம் மீது கடந்த வெள்ளிக் கிழமை பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் 3 எல்லைச் சாவடிகளைக் கைப்பற்றியதாக தலிபான் படைகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனயத்துல்லா, ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறியதற்கான பழிவாங்கும் நடவடிக்கை இது என கூறியுள்ளார்…